உறவில் உச்சம் அடைவது பற்றிய சில விசித்திரமான விஷயங்கள்!

பெரும்பாலும் உறவில் ஈடுபடும் போது தான் உச்ச உணர்வை எட்ட முடியும் என்பது அனைவரின் கருத்து. ஆனால், உறவில் ஈடுபடாமல், அந்தரங்க உறுப்புகளை தீண்டாமலும் கூட உச்ச உணர்வு ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் பல ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர்.

சிலர் ஹார்மோன் கோளாறுகளால் ஒரே நாளில் நூறு முறை உச்சம் எட்டும் நபர்களும் நம் உலகில் வாழ்ந்து வருகிறார்கள். மேலும், ஆண்கள் அதிகம் உச்சம் அடைவதால் புற்றுநோய் அபாயத்தில் இருந்தும் கூட தப்பிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இனி, உச்சம் அடைவது பற்றிய சில விசித்திரமான விஷயங்கள் பற்றி காணலாம்…

பி.ஜி.எ.டி
Persistent Genital Arousal Disorder என்பதன் சுருக்கம் தான் இந்த பி.ஜி.எ.டி. இது ஒருவிதமான கோளாறு அல்லது ஹார்மோன் குறைபாடு என்று கூறலாம். சராசரியாக ஒரு நாளுக்கு நூறு முறைக்கு மேல் உச்சம் உணர்வது தான் இந்த குறைபாடு. பொதுவாக ஸ்பீக்கர் பக்கத்தில் நின்றால் கூட இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு உறவில் உச்சம் அடைவது போன்ற உணர்வு உண்டாகும்.

புரோஸ்டேட் புற்றுநோய்
அதிகமாக உச்ச உணர்வு அடையும் ஆண்கள் மத்தியில் புரோஸ்டேட் புற்றுநோய் உண்டாகும் சதவீதம் குறைவாக இருப்பதை ஹார்வார்ட் மருத்துவ பள்ளியின் ஆய்வில் கண்டறியப்பட்டது.

யோகா
இன்டியானா பல்கலைகழகம் நடத்திய ஆய்வல், 20% பேர் யோகா பயிற்சி செய்யும் போது உச்ச உணர்வு அடைந்கின்றனர் என தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக குண்டலினி யோகா செய்யும் போது அதிகமானோர் இந்த உணர்வு அடைவதாக கூறியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

விந்து பயணம்
19-ம் நூற்றாண்டில் ஆண்களின் விந்து எவ்வளவு தூரம் பயணம் செய்யும் என்ற கேள்வி எழுந்தது. அப்போது, சராசரியாக ஆண்களின் விந்து 2.5 மீட்டர் பயணம் செய்கிறது என கண்டறியப்பட்டது. இப்போது உலக சாதனையாக பதிவாகியிருப்பது மூன்று மீட்டர் பயணம் ஆகும்.

தும்மல்
உறவில் ஈடுபட்டு உச்சம் அடைந்து பிறகு சிலருக்கு கட்டுபடுத்த முடியாத அளவில் தும்மல் ஏற்படுகிறதாம். இதை 2008-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

மெடிக்கல்
சிலருக்கு இயல்பாகவே உச்சம் அடைவதில் குறைபாடு இருக்கும். 19-ம் நூற்றாண்டில் 75% மேற்கத்திய நாடுகளில் வாழும் பெண்களுக்கு இந்த குறைபாடு இருந்ததாகவும். இதற்கு சிகிச்சையாக மருத்துவர்கள் பிறப்புறுப்பில் மசாஜ் செய்யும் முறையை கையாண்டனர் என்றும் கூறப்படுகிறது.

வலிநிவாரணி
உறவில் ஈடுபட்டு உச்சம் அடையும் போது மூளையில் என்டோர்ஃபின் எனும் சுரப்பி சுரக்கும். இது சுரக்கும் போது வலிநிவாரணியாக செயல்படுகிறது. இதை பல ஆய்வுகளில் ஆராய்ச்சியாளர்கள் நிரூபணம் செய்துள்ளனர். மேலும், ஒற்றை தலைவலிக்கு இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தேவையே இல்ல..
ஒருவர் உச்சம் அடைய வேண்டும் எனில், அவரது பிறப்புறுப்பு பகுதியில் தான் தீண்ட வேண்டும் என்றில்லை. உடலின் பல்வேறு இடங்களில் தீண்டும் போதும் உச்சம் உணர்வு ஏற்படுகிறது, ஓர் ஆய்வில், ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு முறையும் பல் துலக்கி முடிக்கும் போதும் உச்ச உணர்வு ஏற்படுவது கண்டறியப்பட்டது.

10-1462868772-8weirdfactsaboutorgasms

Recent Posts